திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவிலில் மண்டல பூஜை பூர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த  திருப்பாலைவனம் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர்      திருக்கோவில் அமைந்துள்ளது.   திருப்பாலீஸ்வரர்   கோவிலில்   18 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.  அதனைத் தொடர்ந்து கோவிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 



மூலவர் சன்னதி,  ஸ்ரீ லோகாம்பிகா தேவி சன்னதி, விநாயகர் சன்னதி மற்றும் பரிவார சன்னதிகள், இராஜகோபுரம் ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. மதிற்சுவர் சீரமைத்தல், கருங்கல் தரைதளம் அமைத்தல், பக்தர்கள் வரிசையில் செல்ல கீயூ லைன் அமைத்தல், பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்துதல், கழிவறை சீரமைத்தல் என ஆலயத்தின் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ1 கோடி மதிப்பீட்டில் செய்து முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி   வெகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தில் பங்கெடுக்க முடியாதவர்கள் மண்டல பூஜை நடைபெறும் 48 நாட்களில் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.



 மகா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடைபெற்று வந்த 48 நாட்கள் மண்டல பூஜையின் நிறைவு நாளான இன்று ஆலய வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. மண்டலாபிஷேக பூர்த்தியை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் பையூர் கேட்ட வேளாண் மரபு தலைவர் துரை முதலியார் மரபு செயலாளர் பூமிநாதன் முதலியார் மரபு ஆலோசகர் நாராயணன் முதலியார் மரபு பொருளார் இளங்கோவ முதலியார் மரபுத் துணைத் தலைவர் விநாயகம் முதலியார் மரபுத் துணை செயலாளர் சந்திர முதலியார் , சோமசுந்தரம் முதலியார், யோகேஷ் முதலியார் உள்ளிட்ட வேளாளர் மரபினர் பலர் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments