அதிமுக கழக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வரும் 31ந்தேதி வருகையொட்டி சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்து
இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி அறிவுறுத்தலின்படி பரமக்குடி நகர் கழக செயலாளர் வி.வின்சென்ட் ராஜா தலைமையில் அண்ணாதிமுக வின் நகர் கூட்டம் 25.03.26 கீர்த்தி மஹாலில் சிறப்பாகநடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் வடமலையான், முன்னாள் மாவட்ட இலக்கிய அணி செயலாளர்திலகர் , முன்னாள் நகர் செயலாளர்கள் வரதன், கணேசன், நகர் கழக துணை செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட,நகர் கழக நிர்வாகிகள்,வார்டு கழக செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், BLA2 முகவர்கள் மற்றும் வார்டு பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

0 Comments