தமிழ்நாடு கம்ம நாயுடு மகா ஜன சங்கம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மண்டலம் உகாதி விழா தனியார் திருமண மண்டபத்தில் மாநில பொருளாளர் வாசுதேவ நாயுடு தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஆர் எம் கே கல்விக் குழும தலைவர் ஆர் எஸ் முனிரத்தினம் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி மறைந்த முன்னாள் தலைவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் விழாவில் பேசிய. அவர் நாயுடு சமுதாயங்கள் ஒன்றிணைந்து பொன்னேரியில் திருமண மண்டபம் கட்ட வேண்டும் சமுதாயத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி உதவிகள் வழங்க வேண்டும் சங்கத்தின் மூலமாக மற்றவர்களுக்கு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்தார் முன்னதாக உகாதி பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் , பஜனைபாடல்கள் நடைபெற்றன விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு யுகாதிபச்சடி மற்றும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
இதில் மண்டல தலைவர் துர்வாசலூ நாயுடு, செயலாளர். சுகுமார், கே.வாசுதேவநாயுடு, செயலாளர் ராஜசேகர், மண்டல பள்ளி பொருளாளர் நாகேஷ், ஆர்,ஈஸ்வரராவ், டாக்டர் ஹேமச்சந்திரன், ரமேஷ் ,நாகேஷ், ஜனார்த்தனன், தாரகராம், கருணாமூர்த்தி பானு பரசாத் வினோத் . நந்தன். மோகன்.உட்பட சங்க நிர்வாகிகள் இளைஞர் அணியினர் மகளிர் அணியினர் சமுதாய உறுப்பினர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.



0 Comments