ஈரோட்டில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவன தலைவர் பொன் விஸ்வநாதன் நாடார் தலைமையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம்


 ஈரோடு மேட்டுக்கடை அடுத்து கிளாசிக் கபே மீட்டிங் ஹாலில் நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் முக்கிய நிர்வாகிகளின்  தேர்தல் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில்  வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு ஆதரவா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை பற்றி நிறுவன தலைவர் பொன். விஸ்வநாதன் நாடார்  கலந்து  கொண்டு  நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ,  அதிமுக கூட்டணிகளுக்கு கீழ்க்கண்ட கோரிக்கை வைக்கப்பட்டது.



நாடர்களுக்கு குறைந்தபட்சம்  ஐந்து தொகுதிகள் ஒதுக்கி நாடார்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கிறார்களோ அந்த கட்சிக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்.கொங்கு நாட்டு மாவீரன் குணாளன் நாடாருக்கு  மணிமண்டபம் அமைத்து சிலை நிறுவி அரசு விழாவாக அறிவிக்க தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.மத்திய அரசு கள் உணவுப் பொருளாக ஏற்றுக்கொண்டது. 2026 ஆளப்போகும் தமிழக அரசும் கள் உணவு பட்டியலில் சேர்த்து கள் இறக்கி சந்தைப்படுத்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும்.



234 தொகுதிகளிலும் பரவி வாழும் பெரும்பான்மையான நாடார் சமுதாயத்திற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் 15% உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.அடுத்து வருகின்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நாடார்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.மேற்கண்ட கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணிக்கு நாடார் மக்கள் முன்னேற்ற சங்கம் முழு ஆதரவளித்து முழுமையான வெற்றிக்கு இரவு பகல் பாராமல்  கடுமையாக  பாடுபடுவார்கள்.



கொங்கு மண்டலத்தில் நாடார்களுக்கு வேட்பாளர் அறிவிக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த நாடார் அமைப்புகளின் ஆதரவோடு வெற்றி தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய 20 தொகுதிகளுக்கு நாடார் வேட்பாளர்களை நிறுத்துவோம் முதல் கட்டமாக ஆறு தொகுதிக்கு வேட்பாளர்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் எம் கே டி கோவிந்தசாமி , கவின் சங்கர் , சோளி சந்துரு , ராஜேந்திரன் , அய்யாசாமி , சின்னசாமி , கே எம் பி முருகேஷ் , சாமிநாதன் , இளங்கோ , பிளாஸ்டிக் கணேஷ் , தங்கராஜ் , பொன்மணி , செந்தில் , கார்த்திக் ,   கௌரிசங்க , சரவணபிரபு , கலைவாணன் ,  கேசவன் , பரமசிவன் , செந்தில்குமார் , ரயில்வே ரஞ்சித் , லட்சுமணன்  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கணேசன் , ரகுபதி , அட்லஸ் செந்தில், திருமூர்த்தி , ஆறுச்சாமி, அர்ஜுனன் , கொங்கு தம்பி  , ஹரி வேலுச்சாமி , யுவராஜ், கே எஸ் ஆறுமுகம் , மூர்த்தி , அருணாச்சலம் , ஜெகதீஷ் , கருப்புசாமி , கனகராஜ்  மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பூபதி ,பெஸ்ட் குமார், கார்த்திக் , சரவணமூர்த்தி , நடராஜ் , விஜயன் ,பெரியசாமி , நாமக்கல் மூர்த்தி  ஈஸ்வரன் , வெங்கட் , ராஜன் , முருகன் , செல்வராஜ் , திருமலை ராஜா , தெய்வசிகாமணி , குணசேகர் , சேகர் , மோகன்ராஜ் , வெங்கிடுசாமி , லோகநாதன் , தில்சக்  முருகேசன்  ஆகியோர்  கலந்து கொண்டுள்ளனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

Post a Comment

0 Comments