திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய பொன்னேரி சட்டமன்ற தனி தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் முன் ஏற்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து. அங்குள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையத்தின் நேரடி மாவட்ட பார்வையாளர் ராஜேஷ் திருப்பாத்தி ஆலோசனை நடத்தினார், அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபடும்படியும், கண்டறியப்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படியும் அறிவுறுத்திய தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் திருப்பாத்தி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா ? என்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் உத்தரவிட்டார்.


0 Comments