அபிராமம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் மீது வழக்கு...... வாகனங்கள் பறிமுதல்



ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தை அடுத்துள்ள டி.புனவாசல் பகுதியில் பட்டாநிலத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி மணல் அள்ளியதாக  டி.புனவாசல் கிராமநிர்வாக அலுவலர் ராமதாஸ் அளித்த புகாரின் பேரில் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தபட்ட பொக்லைன் இயந்திரம் டிராக்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனையடுத்து பொக்லைன் இயந்திர உரிமையாளரான விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை அடுத்துள்ள வேலாயுதபுரத்தை சேர்ந்த செளந்திரபாண்டியன் மனைவி நானாதேவி (50) டி.கள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பூமி மகன் சுந்தரலிங்கம் (24) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Post a Comment

0 Comments