சென்னை புழுதிவாக்கம் ராவணன் நகரில் 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் 2024 - 2025 ஆம் ஆண்டு வார்டு மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழாவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் S.அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டு திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார்.
உடன் பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் 186வது வார்டு மாமன்ற உறுப்பினர் வரிவிதிப்பு (ம) நிதிக்குழு உறுப்பினர் 186வது வட்டக் கழக செயலாளர் J.K.மணிகண்டன்மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



0 Comments