தேனி: அல்லிநகரம் அம்மு கிளினிக் மற்றும் மெடிக்கல் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது



திமுக தேனி வடக்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் மருத்துவர் டி. பாண்டியராஜ் துவக்கி வைத்தார்  தேனி வடக்கு மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொம்மையை கவுண்டன்பட்டி பகுதியில் அம்மு கிளினிக் & மெடிக்கல் மற்றும் பாரா மெடிக்கல் லேப் எஜுகேஷனல் மற்றும் வெல்பேர் அசோசியேஷன்  இணைந்து  இரத்த தான முகாமினை நடத்தியது. இந்த முகாமில்,  தேனி வடக்கு மாவட்ட திமுக மருத்துவரணி அமைப்பாளரும், திரவியம் கல்வி நிறுவனங்களின் தாளாளருமான மருத்துவர் டி.பாண்டியராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 



மேலும், இரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளுடன், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இந்த ரத்த தான முகாமில், தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.



 முகாமில், அம்மு கிளினிக் மற்றும் மெடிக்கல் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகள் ,பொறுப்பாளர்கள், குருதிக்கொடை தன்னார்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். இந்த ரத்ததான முகாமிற்கான ஏற்பாடுகளை அம்மு கிளினிக் மற்றும் மெடிக்கல், பாரா மெடிக்கல் எஜுகேஷன் மற்றும் அசோசியேஷன் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.




Post a Comment

0 Comments