தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்ட நிகழ்வு பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது.
பெரியகுளம் நகராட்சி வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் கலந்து கொண்டு, விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்வில், பெரியகுளம் நகர் கழகச் செயலாளர் முகமது இலியாஸ் முன்னிலை வகித்தார்.
இந்த விழாவில், நகராட்சி ஆணையாளர், நகர் மன்ற உறுப்பினர்கள், நகர் கழக நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். உபகரணங்களைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள், தமிழக அரசுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.



0 Comments