மீஞ்சூர்: தீ விபத்தில் உயிரிழந்த மாணவன்..... முன்னாள் எம்.எல்.ஏ பொன் ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.....



திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஊரணம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் முனுசாமி - முனியம்மா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் சீனிவாசன் 15 அருகே உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முனுசாமி - முனியம்மா தம்பதியர் தங்களது மகளை அழைத்துக் கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், மூத்த மகன் சீனிவாசன் நேற்று மாலை கபடி போட்டி விளையாடி விட்டு, தமது பாட்டியுடன் இரவு வீட்டில் தூங்கி உள்ளார். 



அதிகாலையில் தூங்கி எழுந்த மூதாட்டி வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக குடிசை வீடு திடீரென தீப்பற்றி மள மள வென கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சீனிவாசன் தீயில் சிக்கி கொண்டு அலறியடித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சிறுவன் மீது விழுந்ததில் உடலில் தீப்பற்றி தீயில் கருகி சீனிவாசன் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த நிலையில் தகவல் அறிந்து கழக அம்மா பேரவை செயலாளர் பொன்னேரி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பொன் ராஜா நேரில் சென்று ஆறுதல் கூறி நிவாரண உதவியை வழங்கினார் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபருக்கு வீடு கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் இதில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  முத்துக்குமார் முன்னாள் கவுன்சிலர் பிரகாஷ் முன்னாள் துணைத் தலைவர் ராஜேஷ் வழக்கறிஞர் மாரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பல பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments