ராமநாதபுரம் மாவட்டம் கமுதி நகரில் 1 நம்பர் டிரான்ஸ்பாரம் கடந்த 3 மாதமாக வேலையாக உள்ளது இதனை இரண்டாக பிரித்து சந்தைபேட்டையில் புதியதாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை இதனால் பொதுமக்கள் கோடைகாலமான தற்போது பெரும் அவதியுறுகின்றனர் கமுதி நகர AE டிரான்ஸ்சரில் போன பிறகு தற்போதுவரை காலியிடமாகவே உள்ளது பொறுப்பில் உள்ளவர் ஆபீஸ்சுக்கு வருவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மேலும் L I போர்மேன் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் மேலும் கோட்டைமேட்டில் உள்ள கமுதி துணை மின்நிலையத்தில் AD. பணியிடம் காலியாக உள்ளது பொருப்பில் உள்ளவர் பரமக்குடியில் இருந்து கமுதி வருவதேயில்லையாம் இதனால் பொதுமக்கள் கொண்டுவரும் மனுக்களை ஆபிசில் உள்ளவர்கள் வாங்க மறுத்து திருப்பி அனுப்புவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கமுதி நகருக்கு கூடுதல் டிரான்பார்ம்பரை அமைத்துதரவும் கமுதிக்கு அதிகாரிகளை உடனடியாக நியமனம் செய்து தடையில்லா மின்சாரம் வழங்க ஆவணசெய்ய வேண்டுமாய் கமுதி நகர பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments