திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோவில் பங்குனி மாத பிரமோற்சவ தேரோட்டம்


திருவள்ளூர் மாவட்டம் திருப்பாலைவனம் அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு செய்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்ற வந்தது. இதனை தொடர்ந்து பங்குனி மாத பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில்   அருள்மிகு ஸ்ரீ லோகாம்பிகாதேவி உடனுறை திருப்பாலீஸ்வரர் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தின் போது கைலாய வாத்தியங்கள் முழங்கி, திருவாசகம் பாடி  மேளதாளங்களுடன் பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 



விழாவில் பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளரும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தார் தொடர்ந்து மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

 இந்நிகழ்ச்சியில் பையூர் கேட்ட வேளாண் மரபு தலைவர் துரை முதலியார் மரபு செயலாளர் பூமிநாதன் முதலியார் டி.ஜெ.ஆறுமுகம்..மரபு ஆலோசகர் நாராயணன் முதலியார் மரபு பொருளார் இளங்கோவ முதலியார் மரபுத் துணைத் தலைவர் விநாயகம் முதலியார் மரபுத் துணை செயலாளர் சந்திர முதலியார் , சோமசுந்தரம் முதலியார், யோகேஷ் முதலியார் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இ ஆர் தமிழ்ச்செல்வன் ,முத்துகுமார், ஜெயம் ரமேஷ், தொழிலதிபர் சந்தனம், அதிமுக பிரமுகர் அபிராமன், ஜோதி. சுதாகர் ஆதிசேஷன் , உள்ளிட்ட வேளாளர் மரபினர் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.



Post a Comment

0 Comments