அந்தியூர் பேரூராட்சி எரிவாயு தகன மேடையில் சடலங்களை கட்டணமின்றி எரியூட்டலாம்



ஈரோடு மாவட்டம் , அந்தியூர் சட்டமன்றத் தொகுதி, அந்தியூர் சிறப்புநிலை பேரூராட்சி எரிவாயு தகனமே டையில் சடலங்களை சேவைக் கட்டணமில்லாமல் எரியூட்டலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தியூர் பேரூராட்சியில் ரூ.1.50 கோடியில் கட்டப்பட்ட எரிவாயு தகனமேடையின் பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பொறுப்பை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் அந்தியூர் ஏ ஜி வெங்கடாசலம் சார்பிலான ‘நமது அந்தியூர் ஏஜிவி ஃபவுண்டேஷன்' ஏற்றுள்ளது. இந்த மயானத் தில் சடலங்களை தகனம் செய்ய கட்டணம் செலுத்தத் தேவையில்லை. சேவைக் கட்டணமும் இல்லை.



மேலும், இறுதி மரியாதையின்போது சடலங்களை வீட்டில் வைக்க குளிர்பதன பெட்டி, 20 அடி அகலம் கொண்ட சாமியானா பந்தல், பிளாஸ்டிக் சேர்கள் கட்டணமின்றி வழங்கப்படும்.



இதனை, எரிவாயு மயான அலுவலகத்தில் தங்களது சொந்தப் பொறுப்பில் பெற்றுக் கொண்டு, மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஆகவே அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து மக்களும் இந்த சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று  ஏஜிவி ஃபவுண்டேஷன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி -9965162471, 6382211592 .








Post a Comment

0 Comments