கடந்த 15 ஆம் தேதி பந்தக்கால் நடவு செய்யப்பட்டு 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கும்பாபிஷேக நாளான நேற்று காலை 7 மணி அளவில் யாகசாலை பூஜை ஹோமம் தொடங்கி தீபாராதனை, யாத்ரா தானம், கடகங்கள் புறப்பாடு, விமானம் மஹா கும்பாபிஷேகம், மூலஸ்தானம் மஹா கும்பாபிஷேக தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், ஊராட்சி மன்ற தலைவருமான உஷாஸ்ரீதர் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவக்குமார், ஊராட்சி மன்ற.துணை தலைவர் எபினேசர் ஊர் பொதுமக்கள் சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள்பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



0 Comments