வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோவில் பங்குனி மாத பிரமோற்சவ தேரோட்டம். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்.
வட காஞ்சி என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ விழா ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து ஆலயத்தில் நாள்தோறும் சிறப்பு வழிபாடு செய்து பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்ற வந்தது. இதனை தொடர்ந்து பங்குனி மாத பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அன்னை காமாட்சி அம்மையுடன் ஏகாம்பரநாதர் எழுந்தருளி நகரின் முக்கிய மாட வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஈரோட்டத்தின் போது கைலாய வாத்தியங்கள் முழங்கி மேளதாளங்களுடன் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என முழங்கி பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் மீஞ்சூர், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளர் வேட்பாளரான திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பலராமன் சாமி தரிசனம் செய்து தேரை வடம் பிடித்து இழுத்தார் இதில் ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குமார், தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் செல்வகுமார், மீஞ்சூர் பட்டாபிராமன், தமிழரசன், வழக்கறிஞர் மாரி, டாக்டர் விஜயராகவன், திமுக பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், மணி மேஸ்திரி உள்ளிட்ட அறங்காவல் குழு உறுப்பினர்கள் கோவில். அதிகாரி சிவஞானம் செயல் அலுவலர் முத்துக்குமார் சுப்பிரமணி.உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



0 Comments