தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தற்போதைய நிலையில் 4 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை நிறைவு செய்து, போட்டியிடும் தொகுதிகளையும் முடிவு செய்து வேட்பு மனு தாக்கல் செய்ய தயார் நிலையில் உள்ளனர்.
தேர்தல் அதிகாரிகளும் வேட்பு மனுக்களை பெற தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.இதற்கிடையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தனது பிரசாரத்தை தொடங்குகிறார். விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
இந்த நிலையில், சட்டசபை தேர்தலையொட்டி சென்னை மயிலாப்பூர் பாஜக வேட்பாளரை ஆதரித்து வரும் 4-ம் தேதி பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். மேலும் ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளார். அதனை தொடர்ந்து கன்னியாகுமரி மற்றும் கோவை பகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி விரைவில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

0 Comments