கடலை மிட்டாய்க்கு ஜி.எஸ்.டி. விலக்கு வேண்டும்..... மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. நேரில் வலியுறுத்தல்......



 மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய் தொழிலைப் பாதுகாக்க, ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயலை புதுடில்லியில் நேரில் சந்தித்து அவர் மனு அளித்தார். 

அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: தமிழகத்தின் பாரம்பரிய உணவான கோவில்பட்டி கடலை மிட்டாய் உலகப் புகழ்பெற்ற புவிசார் குறியீடு (GI Tag) பெற்றது.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் காரணமாக, அங்கிருந்து வர வேண்டிய ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான கடலை மிட்டாய்கள் விற்பனையின்றி தேக்கமடைந்துள்ளன.

கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 120-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளன. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.

Post a Comment

0 Comments