ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மண்டலமாணிக்கம் கிராமத்தில் நேற்று தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலம் இட்டு அசத்தினர்.
இதில் வாக்காளர் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை ரங்கோலி கோலமிட்டு அதனருகில் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர்வாக்காளரின் உறுதி மொழி எடுத்துக் கொண்டு,பின்னர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வாக்காளர் விழிப்புணர்வு குறித்து பேரணி நடத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு வட்டார இயக்க மேலாளர் மயில்ராஜ் தலைமை தாங்கினார்.வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமரன், மாரிமுத்து, பில்லத்தியான், சாந்தி, அன்னைதெரசா வீரலட்சுமி, பாலஅமுதா ஆகியோர் செய்திருந்தனர்

0 Comments