தேனி அல்லிநகரம் நகராட்சியில் பல லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு...... எம்எல்ஏ பங்கேற்பு

 


தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நகராட்சி பொதுநிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

​​கே.ஆர். நகரில் பொதுமக்களின் வசதிக்காக கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டிடம்,வார்டு எண் 1ல் குழந்தைகளுக்கான சிறுவர் விளையாட்டு பூங்கா மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய அங்கன்வாடி மையம்,​வார்டு எண் 10ல் குழந்தைகளுக்கான புதிய அங்கன்வாடி கட்டிடம்,வார்டு எண் 32ல்  போக்குவரத்து வசதிக்காக அமைக்கப்பட்ட சிறு பாலம் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.

​இந்த நிகழ்ச்சியில் நகராட்சித் தலைவர் ரேணு பிரியா பாலமுருகன், நகராட்சி ஆணையாளர், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.





Post a Comment

0 Comments