தேசிய முற்போக்கு திராவிட கழகம் கழக நிறுவன தலைவர் கேப்டன் நல் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு,நாகப்பட்டினம் ஒன்றிய தேமுதிக சார்பாக,சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயிலில், சிறப்பு அர்ச்சனை செய்து, நீண்ட ஆயுள் பெற்று, உடல் நலத்துடன் இருக்க வேண்டியும்..2026 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும் என்றும்,மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் மாவட்ட கழக செயலாளர் நாகை ஆர்..பிரபாகரன் தலைமையில் இறைவனிடம் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது.தெய்வ வழிபாட்டில் மாவட்ட கழக துணை செயலாளர் ஏ.பிரபாகரன், மாவட்ட துணை செயலாளர் பக்கிரிசாமி, தொழிற்சங்க பேரவையின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் நாகை ஒன்றிய கழக செயலாளர் பாஸ்கரன் , நாகை நகர கழக செயலாளர் செல்வகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா , மாவட்ட விவசாய அணி செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட நிர்வாகி சிந்தாமணி செந்தில் மாவட்ட நிர்வாகி சுதாகர் மாவட்ட தொண்டரணி செயலாளர் சங்கர் நாகை தெற்கு ஒன்றிய கழக அவைத் தலைவர் முனியசாமி , நாகை வடக்கு ஒன்றிய துணை செயலாளர் முருகேசன் , நாகை வடக்கு ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கோபிநாத், நாகை ஒன்றிய கழக நிர்வாகி மகேந்திரன் , கீழையூர் கிளை நிர்வாகி தவசி ,மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
நாகை மாவட்ட நிருபர் ஜி சக்கரவர்த்தி




0 Comments