திருவள்ளூர் மாவட்டம்,கும்மிடிப்பூண்டி வட்டம் வல்லம்பேடுகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா, முன் பருவ கல்வி (UKG) மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் விளையாட்டு I.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றதுஅனைத்து பெற்றோர்களும், கிராம பொதுமக்களும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
தலைமை ஆசிரியர் சுமதி (பொறுப்பு)பள்ளி ஆசிரியர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முனிராஜ்சேகர் வட்டாரக் கல்வி அலுவலர், கல்பனா வட்டாரக் கல்வி அலுவலர்,M.சுமதி தலைமை ஆசிரியர், T. விஜயா, M.கற்பகவல்லி,v.ரேவதி. இடைநிலை ஆசிரியர் M.கோமதி,தற்காலிக ஆசிரியர் A. கமலி தற்காலிக ஆசிரியர் இராமஜெயம், பழனி, எல்லப்பன், காளத்தி வினோத், சுதாகர், கோவிந்தசாமி, நாகவேல் பள்ளி மேலாண்மை குழு முன்னாள் மாணவ மாணவிகள்கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு. பரிசுகளை வழங்கினார்.
இதில் மெதிப்பாளையம், வல்லம்மேடுகுப்பம், சின்னாரெட்டி கண்டிகை, ஆளப்பிள்ளை கண்டிகை, மதுக்கால் கிராமம், சாலை கிராமம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



0 Comments