செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (மார்ச் 18) மாலை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக இன்று காலையில் இருந்து நோன்பு இருந்த விஜய், மாலையில் நிகழ்ச்சி நடைபெறும் ஹோட்டலுக்கு புறப்பட்டு வந்தார்.அங்கு இஸ்லாமிய சகோதரர்களுடன் தொப்பி அணிந்து பந்தியில் தரையில் அமர்ந்து தொழுகை செய்து நோன்பு கஞ்சி சாப்பிட்டார்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய விஜய், “நாம அரசியலுக்கு வந்ததுல இருந்தே நம்மை பத்தி நிறைய சில வதந்திகள், ‘அந்த டீம்’, ‘இந்த டீம்’ அப்படிலாம் சொல்லிக்கிட்டு இருக்காங்க இல்லையா… ஆனா இவரு எந்த டீமும் கிடையாது, மக்களுடைய டீம், பீப்பிள்ஸ் டீம் அப்படின்னு எல்லாருக்கும் தெரிஞ்சதுக்கு அப்புறம், வேற என்ன அவதூறு பரப்பலாம் இவரு மேல அப்படின்ட்டு ட்ரை பண்ணி எல்லாமே அவங்களுக்கு ஒர்க்கவுட் ஆகல.சோ கடைசியில என்னதான் இந்த விஜய்யை பண்ணலாம் அப்படின்னு நினைக்கும்போது தான் ‘இந்த கூட்டணி’, ‘அந்த கூட்டணி’, எல்லாம் சேரப்போறாரு அப்படின்ட்டு ஒரு பொய்யான ஒரு பிரச்சாரத்தை பண்ணிக்கிட்டு இருந்தாங்க, ஸ்டார்ட் பண்ணி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இந்த நியூஸ் எல்லாம் கேட்டு நீங்க கொஞ்சம் கன்பியூஸ் ஆயிருப்பீங்க.அதனால இங்க மறுபடியும் ஓபனா , தெளிவா ஒரு விஷயத்த நான் சொல்றேன்… நான், நாங்க எப்பவுமே மதச்சார்பற்ற கொள்கைன்றதுல அந்த ஸ்டாண்ட்-லயோ , மதச்சார்பற்ற சமூக நீதியின்ற அந்த நிலைப்பாட்டுலயோ எப்பவுமே சமரசம் வெச்சுக்கவே மாட்டோம். நம்மளுடைய தலைமையில தான் ஆட்சி அப்படின்றதுல எப்பவுமே உறுதியா இருக்கோம்.நம்மளுடைய முதல் மாநாட்டுல கூட நான் சொன்ன மாதிரி, அரசியல்ல யாருக்காகவும் எதுக்காகவும் எந்தவிதமான ஒரு சமரசமும் நாம வெச்சுக்க போறதே இல்லை. அந்த பேச்சுவார்த்தையே கிடையாது. சரிங்களா? அதனால யாரு என்ன அவதூறு பரப்புனாலும் தயவு செஞ்சு அத நம்பாதீங்க.
எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம நெனைச்ச டார்கெட்டநம்மளால நிச்சயமா அடைய முடியும். இன்னைக்கு என்னுடைய இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய ரமலான் நல்வாழ்த்துகள். கான்பிடென்ட்-ஆ இருங்க, நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்று தனித்துதான் நிற்கிறேன் என வெளிப்படையாக தெரிவித்தார்.

0 Comments