ரோகிணி திரையரங்க இயக்குநர் ரேவந்த் சரணுக்கு தவெக தலைவர் விஜய் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக களம் காண்கிறது. இதையொட்டி தவெக தலைவர் விஜய், இன்று வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.அதில் மதுரவாயல் தொகுதியில் ரேவந்த் சரண் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரான இவர் ரோகிணி திரையரங்கின் இயக்குநராக இருக்கிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ கணபதி, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.பெஞ்சமின் ஆகியோர் களம் காண்கின்றனர்.

0 Comments