ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடைதீவுக்கு வனத்துறை மூலம் சுற்றுலா படகு போக்குவரத்து கடந்த 3 ஆண்டுகலாக இயக்கப்பட்டு வருகின்றது. ராமேஸ்வரத்துக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கார் ஆட்டோ மூலம் குந்துகால் கடற்கரை பகுதிக்கு வருகின்றனர் அங்கிருந்து வனத்துறையால் இயக்கப்படும் பைபர் படகில் ஏறி கடலின் அழகை ரசித்தபடி குருசடைதீவில் இறங்குவர்.
பின்னர் தீவின் அழகையும் கடலில் துள்ளிகுதித்து விளையாடும் டால்பின் உள்ளிட்ட உயிரினங்களையும் பார்த்து ரசிப்பார்கள் இதற்காக குந்துகால் கடற்கரையில் இருந்து 4 படகுகள் வரை குருசடை தீவுக்கு இயக்கப்பட்டு வந்தது கடந்தஆண்டு நவம்பரில் ஏற்பட்ட தித்வா புயலில் போது 2 படகுகள் சேதமடைந்தன தற்போது மேலும் ஒரு படகு பழுது என தெரிகின்றது இதனால் தற்போது குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்று அழைத்துவர ஒருபடகே இயக்கப்படுகிறது.
குருசடை தீவை காண வரும் சுற்றுலா பயணிகள் படகுதளத்தில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது ராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சிக்காக அரசு பலகோடிரூபாய் நிதி ஒதுக்கிவரும் நிலையில் சுற்றுலாபடகுகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கவில்லை என கூறப்படுகின்றது என மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துசெல்லும் வகையில் வனத்துறைக்கு புதியதாக கூடுதல் படகுகளை வாங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



0 Comments