ராமநாதபுரம் மாவட்டம், கமுதி - ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும்இரவு அம்மனுக்கு விசேஷ பூஜை நடைபெற்று, அம்மன் பூதவாகனம், காமதேனு, குதிரை உட்பட பல்வேறு வாகனத்தில் இரட்டை மாடுகள் பூட்டப்பட்ட தேரில் மின்னொளி அலங்காரத்துடன் இரவுவீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அம்மன் ரிஷப வாகனத்திலும்,சுப்பிரமணிய சுவாமி மயில் வாகனத்திலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர்நள்ளிரவு சுப்பிரமணிய சுவாமி முன்பு கழுகேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்து சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் அனைவருக்கும் சுண்டல் மற்றும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. நாளைசெவ்வாய்க்கிழமை பொங்கல் திருவிழாவும்,ஏப்-1 ம் தேதி புதன்கிழமை அக்கினிசட்டி திருவிழாவும், ஏப்-3 ம் தேதி வெள்ளிக்கிழமை 2007-ம் தேதி திருவிளக்கு பூஜையும், ஏப் - 4 ம் தேதிசனிக்கிழமை முளைப்பாரி திருவிழாவும் நடைபெற உள்ளது.திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் க்ஷத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

0 Comments