ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சியில் ராமநாதபுரம் திருச்செந்தூர் செல்லும் பைபாஸ் சாலை அருகே கட்டிடம் கட்டுவதற்காக பிரேஸ்மட்ட மணலை சாலையின்அருகே கொட்டி வைத்துள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகின்றது அருகே கல்லூரியும் பள்ளியும் உள்ளதால் காலை மாலை நேரத்தில் மாணவர்கள் கவனமாக வரவேண்டியுள்ளது மிதவேகமாக வந்து கவனமாக செல்வதற்கு காவல்துறை பேரிகார்டு அமைத்துள்ளனர் அதன்அருகே இந்த மணலை கொட்டி வைத்திருப்பதால் வாகனங்கள் விலக முடியாத நிலை இதனால் போக்குவரத்து நெருக்கடியும் விபத்து ஏற்படுகின்றது ஆகையால் மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக மணலை அப்புறப்படுத்த வேண்டுமாய் இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 Comments