சசிகலா முதல்வராக வேண்டி கொல்லங்குடி காளியம்மன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை

 


சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில், சசிகலா தமிழக முதல்வராக வேண்டி தங்கத்தேர் இழுத்து பிரார்த்தனை நடைபெற்றது.

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், கட்சியின் நிர்வாகி வழக்குரைஞர் குரு முருகானந்தம் தலைமையில் கட்சியினர் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

இந்த நிகழ்வில் சுந்தரபாண்டியன், ஜான்சன், முத்துராஜா, திலகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சசிகலா தமிழக முதல்வராக வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்.



Post a Comment

0 Comments