சமயபுரத்தில் வாலிபர்களை மயக்கி நகைகளை திருடிய 3 பெண்கள் கைது.....

 


திருச்சியை அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி குடும்பத்தோடு வரும் பக்தர்கள் இரவில் தங்கியிருந்து காலையில் அம்மனை வணங்குவதற்காக அங்குள்ள விடுதிகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பணக்கார வாலிபர்களிடம் அப்பகுதியில் சுற்றித்திரியும் சிலர் ஆசை வார்த்தை கூறி, வெளியூர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாக அவ்வப்போது சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

சில மாதங்களுக்கு முன்பு முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் சில வாலிபர்களை தொடர்பு கொண்ட பெண்கள், அவர்களை சமயபுரத்திற்கு வரவழைத்து அங்குள்ள பிரபலமான விடுதிகளில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அவர்களிடம் 'உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்' என்று ஆசை வார்த்தை கூறி, டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments