திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றியம் கவரப்பேட்டையில் மறைந்த அதிமுக நிர்வாகிகளின் சார்பில் பி கே எஸ் பிரண்ட்ஸ் நடத்தும் ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இரண்டு வாரமாக நடைபெற்ற இந்த கிரிக்கெட் போட்டியில் 25க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தாங்கள் திறமையை வெளிப்படுத்தினர் இதில் அதிமுக கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி சி மகேந்திரன் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.
இதில் முதலாவதாக எஸ்கே பிரண்ட்ஸ் அணியினர் வெற்றி பெற்றனர் அவர்களுக்கு கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளர் டி சி மகேந்திரன் வெற்றி கோப்பையும் ரொக்கமும் வழங்கினார் தொடர்ந்து இரண்டாவது பரிசை அதிமுக நிர்வாகியும் பிஜே எண்டர்பிரைசஸ் நிறுவனர் பார்வேந்தன் இரண்டாவது வந்த சிவா ஃபிரண்ட்ஸ் அணியினருக்கு வெற்றிக்கோப்பையும் ரொக்கமும் கோப்பையும் வழங்கினார்.
தொடர்ந்து மூன்றாவதாக வந்த கே எஸ் யூங் ஸ்டார் அணியினருக்கு அதிமுக நிர்வாகிகள் செங்கையா மற்றும் டில்லி பாபு வெற்றி கோப்பையும் ரொக்கத்தையும் வழங்கினர். இதில் அதிமுக தெற்கு ஒன்றிய பொருளாளர் வெங்கட கிருஷ்ணன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் என பலர் பங்கேற்றனர்.



0 Comments