முலாயம் சிங் யாதவின் இளைய மகன் மரணம்

 


உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவர் சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். இவர் உத்தரபிரதேச முதல்-மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் செயல்பட்டுள்ளார். இவர் தனது 82வது வயதில் கடந்த 2022ம் ஆண்டு உயிரிழந்தார்.

முலாயம் சிங்கிற்கு 2 மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவிக்கு அகிலேஷ் மகனாக பிறந்தார். 2வது மனைவிக்கு பிரதீக் மகனாக பிறந்தார். தற்போது சமாஜ்வாதி கட்சி தலைவராக அகிலேஷ் செயல்பட்டு வருகிறார். அதேவேளை, முலாயம் சிங்கின் இளைய மகனான பிரதீக் அரசியலில் இருந்து விலகி இருந்தார். 38 வயதான பிரதீக் பாஜகவை சேர்ந்த அபர்னாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பிரதீக் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் உடல்நலம் சற்று முன்னேறிய நிலையில் அவர் வீட்டில் அழைத்து செல்லப்பட்டார். ஆனால், பிரதீக்கிற்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அவர் லக்னோவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பிரதீக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பிரதீக் குடும்பத்தினர் மத்தியிலும், சமாஜ்வாதி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments