அத்திப்பட்டு ஊராட்சி சார்பில் கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களை படித்து அசத்திய மாணவிகளுக்கு பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி பரிசு



திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் அக்கட்சி சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தலைவர் கலைஞரின் பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கட்சியினருக்கு அறிவுறுத்தி உள்ளார். இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த அத்திப்பட்டு ஊராட்சி திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுத்தேர்வில் அசத்திய மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. 



அத்திப்பட்டு அரசுப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பொது தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு முறையே 473, 472, 468 என முதல் 3 இடங்களை படித்து அசத்திய மாணவிகளுக்கு திமுக சார்பில் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அத்திப்பட்டு ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் எம்.டி.ஜி. கதிர்வேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் எம். டி.ஜி. வடிவேல் ஆகியோர் ஏற்பாட்டில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் அத்திப்பட்டு ஏ. ஆர்.டி.உதயசூரியன், முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல் 3 இடங்களை படித்த மாணவிகளுக்கு முறையே பிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி உள்ளிட்டவை சிறப்பு பரிசுகளை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமை தாங்கி வழங்கி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மு.பகலவன்,  பா.செ. குணசேகரன், கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments