ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சைவ மடத்தில், பிரம்மஸ்ரீ ஸ்ரீ கணபதியானந்த ஞான தேசிக சுவாமிகளின் 103-ஆம் ஆண்டு ஜீவ முக்தி (குருபூஜை) விழா 6-6-2026 ல் பக்தி சிரத்தையுடனும், வெகு சிறப்பாகவும் நடைபெற்றது.
இன்று காலை 9:00 மணி அளவில் முறைப்படி யாகசாலை பூஜைகளுடன் இந்த புண்ணிய விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 21 வகையான நறுமணப் பொருட்களால் சிறப்பு மகா அபிஷேகம் மற்றும் விசேஷ அலங்கார தீபாராதனை பூஜைகள் மிகவும் கண் கொள்ளாக் காட்சியாக நடைபெற்றன.
குருபூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, மதியம் 1:00 மணி அளவில் மடத்தின் சார்பில் வருகை தந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் "மாபெரும் அன்னதானம்" வழங்கப்பட்டது.
இந்த ஆன்மீகப் பெருவிழாவில் கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆன்மீகப் பெருமக்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, குருவருளையும் இறைவருளையும் பெற்றுச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறை நிர்வாகிகள் மற்றும் சைவ மடத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.


0 Comments