திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலை மிகுந்த பகுதியாக இருக்க நிலையில் தமிழகத்தில் அதிக மாசு படிந்த தொகுதியாக உள்ளது இந்த நிலையில் இதனை மாற்ற கும்மிடிப்பூண்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிலையில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு முதற்கட்டமாக கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில்10 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர் இந்த வருடத்திற்குள் கும்மிடிப்பூண்டியில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் எனவும் இதனால் மாசு படிந்த கும்முடி பூண்டியை மீட்டெடுக்க இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் மேலும் இதே போன்று 15 துறைகளாக பிரிக்கப்பட்டு 15 துறைகளுக்கும் ஆட்கள் நியமித்து கும்முடிபூண்டி முதன்மை தொகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார் இதில் அரசு அலுவலர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் கிருபாகரன் ஹரி விஜய் பழனி. அன்பு மலர். மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



0 Comments