கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது



கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையம் பாழடைந்த பழைய கட்டிடத்தில் தற்போது செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் அதே வளாகத்தில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 527சதுர மீட்டர் பரப்பளவில் தரைதளம் உள்பட 4 தளங்களுடன் புதிய கட்டிடம் கட்ட ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



இதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மில்டன் ராஜ்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிவாரிய உதவி பொறியாளர் தேவராஜூலு, உதவி பொறியாளர் சந் தோஷ்ராஜன்,தீயணைப்பு அலுவலர்கள் ராமலிங்கம்,ஜெயச் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேற்கண்ட புதிய கட்டிடம் இன்னும் 11 மாதங்களுக்குள் கட்டிக் முடிக்கப்படும் என ஒப்பந்தக்காரர் கார்த்திக் தெரிவித்தார்.



Post a Comment

0 Comments