கும்மிடிப்பூண்டி தாலுக்காவில் நடைபெற்று வந்த ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்களில் 122 மனுக்கள் தீர்வு காணப்பட்டு உடனடிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் கடந்த ஜீன்2.ம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்றது. இதில் பட்டா, ஒருங்கிணைந்த சான்று குடும்ப அட்டை, இறப்புச் குறித்து சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உள்ளிட்ட வருவாய் துறை மூலம் தீர்க்கப்படும் கோரிக்கைகள் கும்மிடிப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த நபர்களிடமிருந்து 362 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 122 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை அவர்களுக்கு எடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மீதமுள்ள 240 .மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில்தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு வழங்குவதற்கான கும்மிடிப்பூண்டி அலுவலகத்தில் நடைபெற்றது சான்றிதழ் நிகழ்ச்சி வட்டாட்சியர் நேற்று இந்நிகழ்ச்சிக்கு சார் ஆட்சியர் தலைமை தாங்கி சான்றிதழ்களை பொன்னேரி சார் ஆட்சியர். அப்துல் ரஹீம் பயனாளிகளுக்கு வழங்கினார்.
மேலும் நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் சுரேஷ்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ரவி, மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, தலைமையிடத்துதுணை வட்டாட்சியர் கனகவல்லி, மற்றும் கும்மிடிப்பூண்டி வருவாய் ஆய்வாளர் விஜயா, மாதரபாக்கம் வருவாய் ஆய்வாளர் திவ்யா, எலாவூர் வருவாய் ஆய்வாளர் பொன்னன், பூவலம்பேடு வருவாய் ஆய்வாளர் ஆரோக்கிய செல்வி ரெட்டம்பேடு.வருவாய் ஆய்வாளர் தேவராஜ் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தியில் உடனடி தீர்வு காணப்பட்டு சான்று வழங்கிய பயனாளிகள் வட்டாட்சியருக்கு நன்றி தெரி வித்துச் சென்றனர்.



0 Comments