குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாகையில் விழிப்புணர்வு பேரணி..... 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு......


குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கியது.



பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பவணந்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித்குமார் தொழிலாளர் துணை ஆய்வாளர் இரா. குருநாதன்,  மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர் ச.செந்தில் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர்கள் பங்கேற்று, குழந்தை தொழிலாளர் ஒழிப்பின் அவசியத்தை வலியுறுத்தினர்.



பதாகைகள் ஏந்திய 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் அதிகாரிகள், குழந்தைகள் கல்வியே முக்கியம் என்ற கோஷங்களை எழுப்பியபடி பேரணியில் கலந்து கொண்டனர்.ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய இந்த பேரணி, சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.



குழந்தை தொழிலாளர்களை முற்றிலும் ஒழிக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியம் என அதிகாரிகள் இந்த விழிப்புணர்வு பேரணியில் வலியுறுத்தினர்.” தொடர்ந்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Post a Comment

0 Comments