கடலாடி அருகே 600 ஆண்டுகள் பழமையான 2 அங்குல கழுகு சிற்பம் கண்டெடுப்பு


 ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஆப்பனூர் அடுத்துள்ள ஆண்டியேந்தல் கிராமத்தில் இரண்டு அங்குல அளவுள்ள அழகிய கழுகு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுகுறித்து கமுதி அடுத்துள்ள பேரையூரைச்சேர்ந்த பட்டாதாரிஆசிரியரும் தொல்லியல் ஆர்வலருமான முனியசாமி கூறியதாவது ஆப்பனூர் அருகே ஆண்டியேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரியநாச்சியம்மன் கோயில் திடலில் இந்த ஊரைச்சேர்ந்த ராஜேஸ்வரனுடன் களஆய்வு செய்தபோது இந்த கழுகு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது இது 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த பகுதியில் தான் கடந்தவாரம் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழி நடுகல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது தற்போது கிடைத்த கழுகு சிற்பத்தின் உயரம் இரண்டு அங்குலம் தான் உள்ளது ஆனால் மிகவும் நேர்த்தியாக இறக்கைகள் கால் கழுத்து கூர்மையான அழகுகள் இதில் செதுக்கப்பட்டுள்ளன இதன் கழுத்தில் துவாரம் இருப்பதால் இதை கழுத்தில் ஆபரணாக அணிந்திருக்கலாம் இதைப்போன்று மிகச் சிறிய கற்சிலைகள் நமது பகுதியில் கிடைப்பது அரிதான ஒன்றாகும் இதை போன்ற மிகச்சிறிய வெண்கல சிலைகள் மெகாஞ்சதாரோ அகழாய்வில் கிடைத்தன நமது ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை கோயிலில் கருவறையின் தெற்கு  சுவரில் இதேபோன்று  மிகச்சிறிய யானை சிற்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது என்றார்.

Post a Comment

0 Comments