விவசாயக் கடன் தள்ளுபடி: திருவாடானையில் ஜூன் 8-ல் தாலுகா அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாய ஒருங்கிணைப்பு குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருவாடானை பெரிய கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

​கூட்டத்தில், தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் உத்தரவை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி, வரும் ஜூன் 8-ஆம் தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தின் முன்பாகப் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

​இது தொடர்பான கோரிக்கை மற்றும் போராட்ட அறிவிப்பு மனுவை தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் சமர்ப்பித்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தை அமைதியான முறையில் நடத்துவதற்கு காவல்துறையினரிடமும் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதாக விவசாய ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments