சிறுவாபுரி முருகன் கோவிலில் பணமாக ரூ.8587141, தங்கம் 36.920 கிராம், வெள்ளி 3.617 கிலோ உண்டியல் காணிக்கை..... கோயில் நிர்வாகம் தகவல்



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி  அடுத்த சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. 6வாரங்கள் இங்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது குறிப்பாக செவ்வாய்க்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் கடந்த 57 நாட்களுக்குப்  பிறகு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் எண்ணும் பணி ஆலய வளாகத்தில் அறநிலைத்துறை பெரியபாளையம் துணை ஆணையர் கார்த்திகேயன் கோவில் உதவி ஆணையர் சிவஞானம். முன்னிலையில்.அறங்காவலர் குழு உறுப்பினர் லட்சுமி நாராயணன் சுப்பிரமணி நடராஜ் மனோஜ் சுதாகர்.  திருக்கோயில் பணியாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 85லட்சத்து 87 ஆயிரத்து 141 ரூபாயும், தங்கம் 36.920 கிராமும், வெள்ளி 3கிலோ 617  கிராம்  காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்படுள்ளன.




Post a Comment

0 Comments