கீழையூர் அருகே ஶ்ரீ ரங்கூன் முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மன் கோவில் 9 ஆம் ஆண்டு திருவிழா..... ரதக்காவடி ஊர்வலம்



நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி பின்னக்குழித்திடலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரங்கூன் முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மன் கோயிலின் ஒன்பதாம் ஆண்டு திருவிழா மிகுந்த பக்தி  உற்சாகத்துடனும் நடைபெற்றது.

திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ ரங்கூன் முனீஸ்வரர் மற்றும் காத்தாயி அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



இதனைத் தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வாக ரதக்காவடி ஊர்வலம் நடைபெற்றது. கீழையூர் காவல் நிலையம் மெயின் ரோடு வழியாக முக்கிய வீதிகளில் இளைஞர்கள் மேளதாளங்கள் முழங்க, நடனம் ஆடியபடி ரதக்காவடியை சுமந்து வந்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். ஊர்வலம் சென்ற பாதை முழுவதும் பக்தி கோஷங்கள் ஒலித்ததால், திருவிழா சூழல் மேலும் ஆன்மிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



அதனைத் தொடர்ந்து, முக்கிய நிகழ்வான கிடாவெட்டு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள்பெற்றனர்.

மொத்தத்தில், கிராம மக்களின் ஒற்றுமையையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது.



 திருக்குவளை செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments