நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு குடமுழக்கு விழா



 நாகை அக்கரைப்பேட்டை அமைந்துள்ள ஸ்ரீ சப்த கன்னி அம்மனுக்கு வருகின்ற.7-6-2026. அன்று ஞாயிற்றுக்கிழமை சரியாக காலை.9:00 மணி அளவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது அது சமயம் முதல் நாள் இன்று.5-6-2026. வெள்ளிக்கிழமை காலையில் கணபதி ஹோமம் செய்யப்பட்டு ஊர் பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் பொதுமக்களும் கலந்து கொண்டு தீபாரதனை காமிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மாலை 4:30 மணி அளவில். ஸ்ரீ. முத்துமாரியம்மன்  ஆலயத்திலிருந்து தீர்த்தம்எடுத்து ஊர் பொதுமக்கள் அனைவரும் பால் குடத்தில் தீர்த்தம் எடுத்து தலையில் சுமந்து நடந்து சென்று சப்த கன்னி அம்மன் கோவிலுக்கு மேள வாத்தியம் முழங்க  தீர்த்தம் எடுத்து சென்றனர் அதனைத் தொடர்ந்து யாகசாலையில் அக்கரைப்பேட்டை ஊர் பஞ்சாயத்தார்கள் அனைவருக்கும் காப்பு கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜை முடிவடைந்து தீபாரதனை காமிக்கப்பட்டது இவ்விழாவில் ஊர் பொதுமக்களும் அக்கரைப்பேட்டை பஞ்சாயத்தர்களும் கலந்து கொண்டனர்.

 நாகை செய்தியாளர் எல் கலைச்செல்வம்






Post a Comment

0 Comments