ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றுச்சூழல் அமைச்சர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்



ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ். மங்கலம் தாலுகாவில் சுமார் ₹3.5 கோடி மதிப்பீட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து பல வருடங்கள் ஆன நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மருத்துவர் வி. கே. ராஜீவ் அவர்கள் ரிப்பனை வெட்டி இந்த அலுவலகத்தை முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச சேதுபதி, மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

​இப்புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் சுற்றுச்சுவர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உடனடியாக மேம்படுத்தித் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments