புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி பாலயோகி நகர் கற்பக விநாயகர் ஸ்ரீ கேதாரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்



கும்மிடிப்பூண்டி தொகுதி புது கும்மிடிப்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பால யோகி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவில்  கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதி புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் ஸ்ரீ பால யோகி நகர் உள்ளது இந்த நகரில் அருள்மிகு கற்பக விநாயகர் உடன் ஸ்ரீ கேதரீஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தின் இரண்டாவது கும்பாபிஷேகம் நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி 12 மணி இதில் வரை நடைபெற்றது.



 வேத முழங்க சிறப்பு அலங்காரம் மந்திரங்கள் அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.இக் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பால யோகி நகர் சங்க தலைவர் சுப்பிரமணி, செயலாளர் பூபதி, பொருளாளர் முரளி, நிர்வாகி விஜயகுமார், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேக முடிவில் பக்தர்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் சீனிவாசன், மதன் மோகன், முன்னாள் புது கும்மிடிப்பூண்டிஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வராஜ், அஸ்வினி சுகுமார், உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியே தரிசனம் செய்தனர். முடிவில் முக்கிய பிரமுகர்களுக்கு சுவாமி கலசங்கள் வழங்கப்பட்டது.



Post a Comment

0 Comments