ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி குரு நகரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கரு பாண்டியன் இவரது மனைவி ராதா. உடல் நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே சிகிச்சை மேற்கொண்டு வந்த இவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இயற்கை எய்தினார். மத வழக்கப்படி இறுதிச் சடங்குகள் முடிந்த பின்பு இவரது உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்க வழக்கறிஞர் கரு பாண்டியன் முடிவு செய்தார். இது தொடர்பாக நேற்று இரவு 10 மணி அளவில் மெழுகுவர்த்தி நண்பர்கள் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமாரை தொடர்பு கொண்டு பேசிய அவர் தனது விருப்பத்தையும் குடும்பத்தாரின் வேண்டுகோளையும் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் இன்று அவரது இறுதிச் சடங்கு நிகழ்விற்கு பிறகு அவரது உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.
மேலும், வழக்கறிஞர் கரு பாண்டியன் அவர்கள் மட்டுமே தனது மரணத்திற்கு பிறகு உடலை தானமாக வழங்குவதற்கு பதிவு செய்திருந்தார். இந்நிலையில் திடீரென அவரது மனைவியின் உடலையும் தானம் செய்ய முன்வந்த அவரது சமூக அக்கறையை மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

0 Comments