திருவாடானை அருகே மாசாணி அம்மன் கோவில் குண்டம் திருவிழா..... திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்.....



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள அரசூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் புகழ்பெற்ற குண்டம் திருவிழா கடந்த ஜூன் 14-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.



​இதனைத் தொடர்ந்து, கடந்த 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் திருவிளக்கு பூஜையும், அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் மயான பூஜையும் வெகுவிமரிசையாக நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக பக்தர்களின் பால்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் மற்றும் அம்மனின் வீதி உலா ஆகியவை நடைபெற்றன.



​விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி இறங்கும் (குண்டம்) விழா இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த சில நாட்களாக விரதமிருந்த ஏராளமான பக்தர்கள், அரசூர் பிள்ளையார் கோவிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு வீதி உலா வந்தனர். பின்னர், கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் (பூக்குழி) இறங்கி, பக்தி முழக்கங்களுடன் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.



​இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றன. இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்குப் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.



Post a Comment

0 Comments