கமுதி அருகே ம.பள்ளபச்சேரி ஸ்ரீ அக்னி வீரபத்ர சுவாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது



ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே ம.பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ அக்னி வீரபத்திர சுவாமி மஹா கும்பாபிஷேக விழா மற்றும் ஸ்ரீ மாலைக் காரியம்மன் கோவில் வருஷாபிஷேக விழா நேற்று  நடைபெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், மகாலட்சுமி ஹோமம் மற்றும்  முதற்கால யாக பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை  நடைபெற்றது  பின்னர் நேற்று இரண்டாம் கால யாக பூஜை, மஹா பூரணாஹூதி மற்றும் தீபாதாரணை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து  பட்டாச்சியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு ஆலயத்தை சுற்றி வலம் சென்று, விமான கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. 

அப்போது வானத்தில் கருடன் வட்டமிட, பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி வழிபாடு செய்தனர்.தொடர்ந்து மூலவர் ஸ்ரீ அக்னி வீரபத்திர சுவாமிக்கு கும்பநீர் அபிஷேகம் மற்றும் பால், தயிர், சந்தனம்  பன்னீர் விபூதி உள்ளிட்ட 16 வகையான மூலிகை திரவிய சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது. 

மேலும் ஸ்ரீ மாலைக்காரியம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது விழாவிற்கான ஏற்பாடுகளை  கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொது மக்கள் செய்திருந்தனர் இவ் விழாவிற்கு ம.பள்ளபச்சேரி மற்றும் கமுதி உள்ளிட்ட சுற்று வட்டார பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments