திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பிரதிநிதி பாளையம் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் மேற்கு ஒன்றியம், சிறுவாக்கம் கிளைக் கழக செயலாளர் ஆ.முரளி, ஆ.கோபி ஆகியோரது சகோதரரும், முன்னாள் சிறுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி பாளையத்தின் கணவர் இலவை ஆ.பாளையம் கடந்தாண்டு மறைந்த நிலையில், முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
இதில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ், பூவிருந்தவல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மறைந்த பாளையத்தின் திருவுருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மலரஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் கே.சுப்பிரமணி, மேட்டுப்பாளையம் ஆர் எம் ஆர் ஜானகிராமன்,மீஞ்சூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கா.சு.ஜெகதீசன், சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் நா.செல்வசேகரன், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி.ரவி, கா.சு.தன்சிங், பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ்உதயன், வயலூர் கே.தசரதன், நாலூர் முன்னாள் கவுன்சிலர் எம்.கே.சகாதேவன், வயலூர் கோபி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் ஆர்.சுரேஷ்பாபு, வன்னிப்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.ஆர்.முரளி, மேலூர் நெல்சன், அனுப்பம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சார்லஸ் என்ற உமா மகேஸ்வரன் இளவம்பேடு திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம், பிரகாஷ், வேலா, ரகு, ரமேஷ், பாலாஜி, பாலு ரஞ்சித் வன்னிப்பாக்கம் கிளைச் செயலாளர் சங்கர், சூளை முருகன், மற்றும் சிறுவாக்கம் ஊராட்சி திமுக நிர்வாகிகள் நண்பர்கள் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.



0 Comments