நாகை: சாட்டியக்குடி நீரேற்றும் நிலையத்தில் கீழ்வேளூர் எம்எல்ஏ லதா ஆய்வு



நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் சாட்டியக்குடியில் அமைந்துள்ள 14 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீரேற்றும் நிலையத்தை கீழ்வேளூர் சட்ட பேரவை உறுப்பினர் டி. லதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, சாட்டியக்குடியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோக நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினார். பொதுமக்களுக்கு தினசரி தேவைக்கு ஏற்ற வகையில் போதுமான மற்றும் தடையற்ற குடிநீர் வழங்கப்படுகிறதா என்பது குறித்து குறிப்பாக கவனம் செலுத்தினார்.



மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி நிர்வாகப் பொறியாளர் தியாகராஜனிடம் நீரேற்றும் நிலையத்தின் செயல்பாடு, சேமிப்பு திறன், விநியோக முறை, மற்றும் பராமரிப்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப விவரங்களை கேட்டறிந்தார்.



குடிநீர் விநியோகத்தில் எவ்வித தடையும் ஏற்படாத வகையில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு எம்எல்ஏ டி. லதா உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் எந்தவித சிரமமும் இன்றி குடிநீர் பெறுவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தினார்.

 திருக்குவளை  செய்தியாளர் த.கண்ணன்

Post a Comment

0 Comments