பூவாமி கிராமம் அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்,அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது



திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பூவாமி   கிரமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்,அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன்   ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது இங்கு மூன்றாவது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது  கடந்த 10 நாட்களாக   சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காப்பு கட்டி விரதம் இருந்து அம்மனை போல வேடம் அனிந்து தீக்குழியில் இறங்கி ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கமிட்டு தாங்கள் நேர்த்திகடனை செலுத்தினர்.



  அப்போது சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டை பூவாமி  கிராம மக்கள் செய்திருந்தனர் மேலும் இதில் சிறப்பாக அழைப்பாளராக தமிழக வெற்றிக்கழக திருவள்ளூர் வடக்கு மாவட்ட இணை செயலாளர் சிலம்பரசன் ஒன்றிய செயலாளர்கள் பழவை சலீம், கோளூர் ஊராட்சி செயலாளர் ஜெகன், பாரதிநகர் ஜெய்,சோழவரம் அருண், பூவாமி கிராம கிளை செயலாளர் நரேஷ், ராகசுதன், சுரேஷ் சூர்யா.பூவாமி கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்  அசம்பாவிதம் தவிர்க்க வன்னன் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.




Post a Comment

0 Comments