இராமநாதபுரம் மாவட்டம், கொட்டியக்காரன் வலசையில் உள்ள அல் மதரஸத்துல் நூருல் ஹுதா வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஜிஹான் கல்வி மற்றும் சமூக நல இஸ்லாமிய அறக்கட்டளை, கொட்டியக்காரன் வலசை முஸ்லீம் ஜமாத், தீன் காக்கும் இளைஞர் சங்கம், பாபு குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மைமுன் ஆப்டிகல்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த முகாமை நடத்தினார்கள்.முகாமில் டாக்டர் பாபு லதீப் மற்றும் மைமூன் ஆப்டிகல்ஸ் நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் கொட்டியக்காரன் வலசை முஸ்லிம் ஜமாத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், தீன் காக்கும் இளைஞர் சங்கத்தின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், பாபு குழந்தைகள் மருத்துவமனை ஊழியர்கள், மைமூன் ஆப்டிகல்ஸ் ஊழியர்கள் மற்றும் ஜிஹான் அறக்கட்டளையின் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு முகாமை சிறப்பாக நடத்தினர்.இந்த இலவச மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

0 Comments